Malaysia

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 13 கோடி வெள்ளி ஒதுக்கீடு! பட்ஜெட்டில் பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர்,அக்.18-
நாட்டின் வரலாற்றில் அதிக தொகையைக் கொண்ட பட்ஜெட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மலேசிய மடானி பொருளாதார மேம்பாட்டினை முன்னிருத்தி டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்றாவது முறையாக வரவு செலவினை தாக்கல் செய்தார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்: 421 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மலேசிய இந்தியர்களின் சமூக மேம்பாடு புத்தாக்கம், மனித மூலதனம் மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக அரசாங்கம் 13 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பழுதடைந்த பள்ளிகளை மறுசீரமைக்க அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டில் தேசியப் பள்ளி, சீன பள்ளி, தமிழ்ப்பள்ளி, சமயப்பள்ளி, ராணுவப் பள்ளி மற்றும் சிறப்பு கல்வியியல் பள்ளிகள் அடங்கும்

நாடு முழுவதும் நில அமிழ்வு ஏற்பட்டிருக்கும் பகுதிகளைச் சீரமைக்க 250 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button