MalaysiaInternational

ஆசியான் மாநாட்டில் வரலாற்றுச் சந்திப்பு மலேசியாவும் சீனாவும் வட்டார வளர்ச்சிக்குக் கைகோர்த்தன

 

கோலாலம்பூர், மே 27-

2045 ஆசியான் உச்சி மாநாட்டின் (ASEAN Summit 2045) ஒரு பகுதியாக, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சீனப் பிரதமர் லி கியாங்குடன் இருதரப்புச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

இச்சந்திப்பின்போது, எதிர்காலத்தில் வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீன மக்கள் குடியரசு கொண்டுள்ள உயர்ந்த ஈடுபாட்டிற்காக மலேசியப் பிரதமர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் தற்போது நடைபெற்று வரும் ஆசியான்-ஜி.சி.சி-சீனா உச்சி மாநாட்டு (ASEAN-GCC-China Summit) தளம் வழியாக வட்டார ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேம்படுத்த இரு தலைவர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.

பொருளாதாரம், ஹலால் தொழில், வர்த்தகம், போக்குவரத்து (குறிப்பாக கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம், பசுமை ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை இச்சந்திப்பில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்ட துறைகளாகும்.

மேலும், உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கான சீனாவின் ஆதரவுக்கு மலேசியா தனது நன்றியைப் பதிவு செய்தது. இது வட்டார மற்றும் உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு மறைமுகமாகப் பங்களிப்பதாக மலேசியப் பிரதமர் சுட்டிக்காட்டினார்

இந்த நெருங்கிய ஒத்துழைப்பு மலேசியா சீனா மற்றும் முழு ஆசியான் வட்டாரத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இந்த உச்சி மாநாடு வட்டாரத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேலும் உத்வேகப்படுத்தும் என்று மலேசியப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button