
Malaysia
தீபத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் பி.யுவராஜ் தீபாவளி வாழ்த்து
ஈப்போ, அக்.27-
தீபத் திருநாளில் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதோடு இல்லாதவர்களுக்கு உதவி செய்வோம் என ஈப்போ கிந்தா சமூகநல, கலை கலாச்சார,பண்பாட்டு, விளையாட்டு சங்கத்தின் தலைவர் பி.யுவராஜ் கூறினார்.
தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கமானதாகும். எனினும், நம்மால் முடிந்தவரை இந்த நன்னிளில் மற்றவர்களுக்கு உதவி செய்வது முக்கியம் என ஈப்போ வேல் தங்கும் விடுதியில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பில் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காவல் துறை, பெர்கேசோ, தனியார் நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனுடன், விருந்தினர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பல சுவையான உணவுகளும் பரிமாறப்பட்டன.



