Malaysia

லிஸ்தென் செகருட்டி நிறுவன ஏற்பாட்டில், ஆசிரம குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஆடை அணிகலன்கள் மற்றும் விருந்துபசரிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்

பினாங்கு மாநில தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி

பினாங்கு, அக்.28-
பத்து மாவுங் லிஸ்தென் செகருட்டி நிறுவனத்தின் இயக்குநர் திரு ஆறுமுகம் சின்னசாமி அவர்களின் தலைமையில்,
சுங்கை பட்டானி குருநாதா ஆசிரமத்தை சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியோர்களை பினாங்கிற்கு அழைத்து வந்து,
சிவசாமி & சன்ஸ் ஜவுளி நிறுவனத்தில், அவர்கள் விரும்பிய ஆடைகள், அணிகலன்களை வாங்கிடும் வண்ணம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தந்தனர்.

அதனையடுத்து,
பாயா தெர்போங் சிவம் கேதரிங்கில்,
அனைவருக்கும் உணவு உபசரிப்புகள் வழங்கப்பட்டு, தீபாவளி வாழ்த்துகள் பரிமாரி மகிழ்ந்ததாக திரு.ஆறுமுகம் சின்னசாமி
கூறினார்.

மீண்டும் அனைவரையும் சுங்கை பட்டாணி, குருநாதா ஆசிரமத்திற்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இத்தீபாவளியின் போது,
இத்தகைய ஒரு நல்லுதவியினை செய்தது ஆண்டவனின் அருளாலே என லிஸ்தென் செகருட்டி நிறுவன இயக்குநர் திரு.ஆறுமுகம் சின்னசாமி
தீபாவளி குதுகலத்துடன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button