Malaysia

நான்கு வருடத்தில் நான்கு முறை மறுசுழற்ச்சிகள் பதுக்கல். நீதி மன்ற நடவடிக்கை நிச்சயம்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ,நவ.9-
ஈப்போ கார்டன் ஜாலான் மெர்ப்பாத்தி சாலையில்
தொடர் வீட்டில் மறு சழற்சி பொருட்கள்
குவிக்கப்பட்ட சம்பவமானது நான்கு வருடத்தில் நான்கு முறை
நடந்துள்ள கசப்பான சம்பவம்
என ஈப்போ மேயர்
டத்தோ ருமாய்சி பஹாரின் வர்ணித்தார்.

எனினும், அவ்வீட்டின் வாசல் முன் தொடர்ந்து மறு சுழற்சி பொருட்களை குவித்து வைத்திருப்பது
அசொளகரியத்தை
உண்டு பண்ணியிருப்தாக
அவர் சொன்னார்.

நான்கு முறை அப் பெண் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு அபராதம் விதித்தும்
தொடர்ந்து இந்த தவற்றை செய்கிறார் என அவர் வேதனையுடன்
சொன்னார்.

நவம்பர் 7 ஆம் தேதி காலை வேளையில் நெகிழி, காகிதங்கள், கட்டைகள், இரும்பு துண்டுகள் போன்ற பொருட்கள் விற்க்கப்பட்டு அதற்க்கான பெறப்பட்ட பணத்தை அப் பெண்ணிடம் கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இச் சம்பவம் மீண்டும் நிகழ்ந்தால் நீதி மன்றம் நடவடிக்கை நிச்சயம் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button