
Malaysia
சித்தியவான் தாமான் சிங்கா எனுமிடத்தில் மூன்று வீடுகள் தீக்கிரை. எரி பொருள் திரவம் கொண்டு வந்த வாலிபர் யார்?
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
மஞ்சோங், நவ.9-
சனிக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் சித்தியவான் தாமான் சிங்கா எனுமிடத்தில் மூன்று வீடுகளில் தீ ஏற்ப்பட்ட சம்பவம்
தொடர்பாக 28 வயது வியாட்னாம் பெண் ஒருவர் விசாரணைக்கு உட்ப்படுத்தப்பட்டதாக மஞ்சோங் போலிஸ் தலைவர் உதவி ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ராமான் கூறினார்.
தனது வீடும் மேலும் இரண்டு வீட்டிலும் தீ பரவியதாகவும் அவரின்.மூன்று வாகனங்கள் தீயில்
சேதமுற்ற தகவலை 42 வயது சீன ஆடவரிட்டத்திலிருந்து தகவல் பெற்றதாக சொன்னார்.
அவரின் வீடு 90 சகவிகிதம் பாதிப்புற்றதாக குறிப்பிட்ட அவர்,
எரி பொருள் திரவம் நிரப்பப்பட்ட
இரண்டு தோம்புகளுடன் வீட்டின் வளாகத்தில் தோன்றிய ஆடவர் ஒருவர் தீ பரவுவதை பார்த்த மறுகணம் அங்கிருந்து ஓடியதாக சொன்னார்.



