
Malaysia
டிரேய்லர் லோரி பின் புறத்தை மோதிய விரைவு பேருந்து. 3 பெண்கள், 1 முதியவர் காயம்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.9-
மலாக்காவிலிருந்து கெடா நோக்கி 3 ஆண்கள், 33 பெண்கள், 5 சிறார்களுடன் பயணித்த விரைவு பேருந்து முன் சென்ற டிரேய்லர் லோரியை மோதிய
விபத்தில் மூன்று பெண்கள் ,ஒரு மூத்த பிரஜை சொற்ப காயங்களுக்கு உட்பட நேரிட்டது
சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 295 .4 கீலோ மீட்டர் கோப்பெங் அருகே நிகழந்த விபத்தில் உயிருடற்ச் சேதம் இல்லை என பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு உறுதிப்படுத்தியது



