
“சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன்” ம.இ.காவின் சிறந்த தலைவர்; சிறந்த தலைமைத்துவம் ம.இ.காவை சிறந்த முறையில் வழிநடத்தும் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசம் சிறப்பு செய்திகள்
குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், நவ.19-
ஒரு குடும்பத்தை வழிநடத்தும் தந்தை ஆற்றல் மிக்கவராக இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அந்த வகையில் ஒரு தந்தைக்கு நிகராக ம.இ.கா என்ற மாபெரும் கட்சியை சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறார் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.
ம.இ.காவை எப்படி வழிநடத்த வேண்டும்? என்ன செய்தால் கட்சி வலுப்பெறும் என்பதை நன்கு அறிந்தவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன். அதை உணர்ந்துதான் தூரநோக்கு சிந்தனையுடன் ம.இ.கா தலைமைத்துவத்தை சரியான முறையில் வழிநடத்தி வருகிறார் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.
இதன் காரணமாகவே ம.இ.காவை தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உட்பட ம.இ.கா தலைவர்கள் பலரும் விரும்புகின்றனர்.
ம.இ.கா தேசிய தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முடிவு செய்த போது டத்தோஸ்ரீ சரவணன் மற்றும் இதர தலைவர்கள் அவருக்கு பிளவுபடாத ஆதரவை வழங்கி தலைவர் பீடத்தில் அமர வைத்தனர். இதற்கு தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் ஆற்றல், அணுமுறை, தூரநோக்கு சிந்தனை, சிறந்த தலைமைத்துவம் போன்ற அம்சங்களே காரணம் என்பது தெளிவான உண்மை.
நமக்கு தோல்வி வரும் போதுதான் நண்பர்கள் யார் என்பது தெளிவாக தெரியும். புரியும். அந்த வகையில் மாலுமி இல்லாத கப்பலாக நிற்கதையாக இருந்த ம.இ.காவை தோளில் சுமந்தவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன். அந்த நேரத்தில் ம.இ.காவுடன் இருந்தவர்கள்தான் ம.இ.காவின் உண்மையான தொண்டர்கள் என்பது தெரிந்தது.
நமக்கு பட்டம், பதவி முக்கியமல்ல. பதவியை எதிர்பார்த்திருந்தால் அதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. நமக்கு பதவி இல்லாவிட்டாலும் பாதகமில்லை. நாம் உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவோம். ம.இ.கா உறுப்பினர்களின் நலனுக்காக பாடுபடுவோம். அவர்களின் நலனில் ம.இ.கா தலைமைத்துவம் கவனம் செலுத்தும் என்று அன்று சொன்னார். சொன்னதை செய்த செயல்வீரராக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இன்று திகழ்கிறார்.
ம.இ.கா உறுப்பினர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இலக்கு. அதனை MIED, AIMST மூலம் நிறைவேற்றி வருகிறார். நாம் முதலில் நமது வீட்டை பார்ப்போம் என்று அப்போதே சிந்தித்ததன் விளைவாகவே இன்று இந்திய சமுதாயம் ம.இ.காவை திரும்பி பார்க்கிறது.
“சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன்; எனக்கு வேறொன்றும் தெரியாது” எனும் பாடல் வரிகளுக்கு செயல்பட்டு வரும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சிறந்த தலைவர் என்றால் அது மிகையில்லை. சாதனை நமது கையிலே, சரித்திரம் படைப்போம் நாட்டிலே, சோதனை ஆயிரம் வந்தாலும் தொடர்ந்தே நாமும் முன்னேறுவோம்



