
தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் வசதி குறைந்தவர்களுக்கும் ஆசிரமங்களுக்கும் உதவுவது அவர்களின் சுமையை குறைக்கும்
தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் வசதி குறைந்தவர்களுக்கும் ஆசிரமங்களுக்கும் உதவுவது அவர்களின் சுமையை குறைக்கும்
உதவிப் பொருட்கள் வழங்கிய பிரபல தொழில் அதிபர்
டத்தோ ஏ.கே.தேவராஜா கருத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
படங்கள் : ஹரி ஸ்ரீநிவாஸ்
கிள்ளான்,நவ.19-
தீபாவளி பண்டிகையை நல்ல முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக பலவழிகளில் பணத்தை செலவு செய்துள்ள வசதி குறைந்தவர்களுக்கும் ஆசிரமங்களுக்கும் தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் உதவுவது அவர்களின் சுமையை குறைக்கும் என்று
மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிய பிரபல தொழில் அதிபர்
டத்தோ ஏ.கே. கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் வசதி குறைந்த மக்களுக்கும் ஆசிரமங்களுக்கும் தொடர்ந்து உதவி வருகிறேன். இதற்கு காரணம் அவர்களின் சுமையை சிறிதளவு குறைக்க வேண்டும் என்பதுதான். மேலும் தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் உதவி வழங்கியிருப்பதாக டத்தோ ஏ.கே.தேவராஜா தேசம் டிவியிடம் தெரிவித்தார்.
பண்டிகை காலங்களில் பல கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட பலரும் மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் நான் தனிப்பட்ட ஆளாக என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். எனக்கு இயக்கம் எல்லாம் எதுவும் இல்லை. நான் தனிப்பட்ட ஆளாக பண்டிகை காலங்களில் பல ஆண்டுகளாக உதவிப் பொருட்களை வழங்கி வருவதாக டத்தோ ஏ.கே.தேவராஜா கூறினார்.
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையிலும் வசதிகுறைந்த மக்களுக்கான உதவிப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் வசதிகுறைந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் தமது நோக்கம் என்று டத்தோ ஏ.கே.தேவராஜா சொன்னார்.
கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான டத்தோ ஏ.கே. தேவராஜா கிள்ளான் வட்டாரத்தை சேர்ந்த மொத்தம் ஏழு ஆசிரமங்களில் வசிக்கும் வசதி குறைந்த ஏழை எளியோருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தீபாவளி சிறப்பு அன்பளிப்பு மற்றும் பொருளுதவிகளை டத்தோ ஏ.கே.தேவராஜா வழங்கினார்.
டத்தோ ஏ.கே.தேவராஜா சிறப்பான வகையில் இப்பொருளுதவிகளை வழங்குவதற்கு அவருக்கு உதவியாக கோத்தா ராஜா வட்டார சமூக சேவையாளர் திரு.பி.ஓய் வேலு செயல்பட்டார். தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் மக்களுக்கும் ஆசிரமங்களுக்கும் உதவ வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டுள்ள பிரபல தொழிலதிபர் டத்தோ ஏ.கே.தேவராஜா அவர்களின் எண்ணத்தை பாராட்டுவோம்



