Malaysia

சிறு வியாபாரிகளின் நலனுக்காக வெ. 2 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தகவல்

ஷா ஆலம், நவ.20–
சிலாங்கூர் மாநில சிறு வியாபாரிகளின் மேம்பாட்டிற்காக
கடந்த 8 ஆண்டுகளில் 2 கோடியே 11 லட்சம் வெள்ளி
செலவிடப்பட்டதாக மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

மாநில அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு (புளுபிரிண்ட்)
திட்டத்தின் வாயிலாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை
5,645 பேர் பயனடைந்துள்ளதாகக் கூறப்பட்டது.

இது தவிர்த்து, இந்திய தொழில்முனைவோருக்காக
2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிலாங்கூர் இந்திய சமூக மற்றும்
தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) வாயிலாக 410பேர் 23 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான வர்த்தக
உபகரணங்களைப் பெற்றுள்ளதாகவும் பாப்பாராயுடு தெரிவித்தார்.

இத்திட்டங்கள் வாயிலாக விவசாயம், கால்
நடை வளர்ப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்திக்
கொண்டதாக மாநில சட்டமன்ற கூட்டத்தில் விவரித்தார்.

இத்திட்டங்கள் மூலம் உதவி பெறுவோர்
தங்களுக்குக் கிடைத்த வரத்தக உபகரணங்களை விற்கக்கூடாது என்பதையும் பாப்பாராயுடு சுட்டிக் காட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button