
மகனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ரவாங் சட்டமன்ற உறுப்பினருக்கு தாயார் நன்றி
ரவாங், நவ.21- சட்டமன்ற உறுப்பினரின் ஒரு கையெழுத்து ஒரு
உயிரைக் காக்க உதவியிருக்கிறது.
அந்த உதவிக்காக அந்த சட்டமன்ற
உறுப்பினருக்கு கிடைத்த பரிசு ‘நன்றி‘ என்ற விலை மதிக்க முடியாத
வார்த்தை.
எப்போதோ செய்த உதவியை மறவாமல் நினைவில் மாது ஒருவர் நன்றி
கூறிய அந்த நிகழ்வை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்
ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட்.
கடந்த சனிக்கிழமை ரவாங் கன்றி ஹோம்ஸில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பின் போது தன்னைச் சந்தித்த அந்த மாது “என் மகனுக்கு உதவியதற்கு நன்றி“ எனக் கூறியதைக் கேட்டு தாம் வியப்படைந்ததாக அவர் கூறினார்.
“என் மகனுக்கு உதவியதற்கு நன்றி ஒய்.பி.“ என அந்த மாது என்னிடம்
கூறினார். “ஓ.. பரவாயில்லை எனக் கூறிய நான் என்ன உதவி செய்தேன்?“
என அவரிடம் வினவினேன்.
“நீங்கள் செய்த மருத்துவ உதவியால் நான் மருத்துவரைச் சந்திப்பதற்கு
வாய்ப்பு கிட்டியது“ என அவர் பதிலளித்தார்.
“எவ்வளவு தொகைக்கு நான்
கையெழுத்திட்டேன்“ என அவரிடம் மீண்டும் கேட்டேன்.
ஏனென்றால், நான் அடிக்கடி இத்தகைய உதவிக்கான விண்ணப்பங்களில்
கையெழுத்திடுவதால் அதில் குறிப்பிடப்படும் தொகையை நினைவில்
வைத்துக் கொள்வதில்லை.
அதனால் சில நூறு வெள்ளியாக இருக்கும் என
மனதில் நினைத்துக் கொண்டேன்.
“என் மகன் இப்போதுதான் ஐ.ஜே.என்.னில் (தேசிய இருதய சிகிச்சைக்
கழகம்) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
அறுவை சிகிச்சைக்கான
செலவு 50,000 வெள்ளி. உங்களின் ஒரு கையெழுத்தினால் அனைத்து
செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டது“ என்று அவர்
பதிலலித்தார்



