InternationalMalaysia

இந்தோனேசியா, பாலியில் நடைபெறும் கால்பந்து போட்டிக்குச் செல்லும் 24 இந்திய மாணவர்களுக்கு உதவுங்கள் 50 ஆயிரம் வெள்ளி நிதியை திரட்ட பயிற்றுநர் சந்திரன் முயற்சி

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர்,ஆக.6-
கால்பந்து துறையில் அதிகமான இந்திய இளைஞர்களை உருவாக்கும் நோக்கத்தில் துடிப்போடு செயல்பட்டு வரும் KELAB BOLA SEPAK TENAGA JUARA
அணியின் தோற்றுநர் சந்திரன் ராஜாவின் (வயது 48) முயற்சிக்கு இந்திய சமுதாய மக்கள் கைகொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, பாலியில் தடைபெறும் தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க 24 இந்திய மாணவர்கள் தயாராகி வரும் நிலையில் அங்கு செல்வதற்கு பணம் ஒரு தடையாக இருப்பதால் இந்திய சமுதாயம் உதவ வேண்டும் என்று கால்பந்து பயிற்றுநரும் KELAB BOLA SEPAK TENAGA JUARA அணியின் தலைவருமான சந்திரன் கூறினார்.

இந்தோனேசியா, பாலியில் வரும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரையில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதில் மலேசியாவை பிரதிநிதித்து KELAB BOLA SEPAK TENAGA JUARA அணியைச் சேர்ந்த 24 பேர் பாலி செல்லவிருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கிறது.இந்த கால்பந்து போட்டியில் பங்கேற்க அவர்களுக்கு மொத்தம் 50 ஆயிரம் வெள்ளி தேவைப்படுகிறது என்று சந்திரன் தேசம் ஊடகத்திடம் தெரிவித்தார்.

இந்திய இளைஞர்களை கால்பந்து துறையில் உருவாக்க சிப்பாங்கை சேர்ந்த சந்திரன் பாடுபட்டு வருகிறார். இதற்காக KELAB BOLA SEPAK TENAGA JUARA
அணியை அமைத்து மாணவர்களுக்கு சந்திரன் பயிற்சி வழங்கி வருகிறார். இதுவரையில் 16க்கும் மேற்பட்ட ஆட்டக்காரர்களை உருவாக்கி இருக்கும் சந்திரன் தற்போது இந்திய மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார்.

இதில் 13 முதல் 15 வயது மாணவர்களுக்கு பயிற்சா வழங்கி வரும் நிலையில் இதில் தேர்ச்சி பெற்ற 24 மாணவர்களை இந்தோனேசியா, பாலிக்கு அழைத்துச் செல்கிறார். தம்மால் முடிந்தவரை மாணவர்களுக்கு உதவி வழங்கியுள்ளதாகவும் ஆனால், இந்தோனேசியா, பாலியில் நடைபெறும் இந்த தேசிய போட்டிக்கு தேவைப்படும் 50 ஆயிரம் வெள்ளியை தம்மால் திரட்ட முடியவில்லை என்று சந்திரன் சொன்னார்.

இந்த தேசிய அளவிலான போட்டிக்கு தேவையான நிதியை திரட்டுவதில் மும்முரம் காட்டி வரும் சந்திரன் 10 வயது தொடங்கி கால்பந்து விளையாடி வருகிறார். அதன்பிறகு அதிகமான இள்ளஞர்களை உருவாக்கியுள்ளார். நாம் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டவில்லை என்றால் அவர்கள் வழிதவறிச் சென்று விடுவார்கள். இந்த KELAB BOLA SEPAK TENAGA JUARA அணிக்கு அரசியல் தலைவர்கள் உதவ முன்வர வேண்டும் என்றார் சந்திரன்.

இதன் காரணமாகவே அவர்களுக்கு கால்பந்து பயிற்சி வழங்கி வருவதாகவும் நல்ல திறமையான இந்திய இளைஞர்களை கால்பந்து துறையில் உருவாக்கி அவர்களை தரமிக்க ஆட்டக்காரர்களை உருவாக்க தினைக்கும் தமது முயற்சிக்கு இந்திய சமுதாயம் கைகொடுக்க வேண்டும் என்று சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இந்த அணிக்கு உதவ நினைப்பவர்கள் KELAB BOLA SEPAK TENAGA JUARA என்ற அணியின்
PUBLIC BANK AC NO 3232369902 என்ற வங்கி கணக்கில் பணத்தை சேர்ப்பிக்கலாம். பணத்தை பட்டுவாடா செய்து கீழ்க்காணும் எண்ணில் ரசீதை அனுப்பலாம்.
தொடர்புக்கு 0132096675

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button