Malaysia

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா மகளிர் பகுதி ஏற்பாட்டில் கந்தர் சஷ்டி மற்றும் வேலின் மகிமை சொற்பொழிவு நடைபெற்றது

ஈப்போ,அக்.7- ஈப்போ,கல்லுமலை அருள்மிகு சுப்ரமணியர் ஆலய மண்டபத்தில் கந்தர் சஷ்டி மற்றும் வேலின் மகிமை சொற்பொழிவு ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா மகளிர் பிரிவு ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கந்தர் சஷ்டி மற்றும் வேலில் மகிமை சொற்பொழிவை தமிழ்நாட்டை சேர்ந்த முருகர் சொற்பொழிவு பேச்சாளர் இராம விஜயகுமார் மிக சிறப்பாக சொற்பொழிவை வழி நடத்தினார். இந்த தீபாவளி மறுநாள் தொடர்ந்து 9 நாள் கொண்டாடப்படும் கந்தர் சஷ்டி விரதம் குறித்தும் அதனால் ஏற்படும் உடல் மாற்றத்தின் நன்மை குறித்தும் தமிழக முருக பத்தி சொற்பொழிவு பேச்சாளர் இராம விஜயகுமார் மிக எழுமையான முறையில் சொற்பொழிவில் எடுத்துவுரைத்தாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா மகளிர் பகுதி தலைவி அம்பிகா மனோகரன் தெரிவித்தார். மேலும் முருக பெருமானின் வேலின் மகிமையை மிக தெள்ள தெளிவாக எடுத்துரைத்த அவர் பேச்சு அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியதாக அவர் கூறினார். நமது மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் இது போன்ற ஆன்மிக சொற்பொழிவுகளில் கலந்துக்கொண்டு, அன்றாட வாழ்கையில் இதை பின்பற்றினால் தங்கள் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வை முதல் முறையாக தமது தலைமையிலான ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா மகளிர் பகுதியினர் பல சிரமங்களுக்கு மத்தியில் வழிநடத்திய மகளிர்கள்,ஆலய நிர்வாகம்,இந்த நிகழ்வை மிக சிறப்பாக வழிநடத்திய தமிழக முருக பக்தி பேச்சாளர் இராம விஜயகுமார் அவர்களுக்கும் , நிகழ்வில் கலந்துக்கொண்ட முருக பக்தர்களுக்கும் அம்பிகா மனோகரன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் ஆலய தலைவர் சீதாராமன் ஆகியோர் உட்பட திரளான முருக பக்தர்கள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button