
ஈப்போவில் உலக மகா கவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 து பிறந்த நாள் விழா.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, டிச.5-
துளிரும் டிசம்பர் 11 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஈப்போ ஜாலான் கொனாலி சாலை பேராக் இலங்கையர் கலாச்சார மண்டபத்தில் உலக மகா கவி சுப்பிரமணிய பாரதியாரின் 242 ஆவது பிறந்த நாள்
விழா சிறப்புடன் கொண்டாட உலகலாவிய அறிஞர் பெருமக்கள்,வழக்கறிஞர்கள்,நீதியரசர்கள்,கவிஞர்கள், திரையுலக இயக்குனர்கள் ,நடிகர்கள், பல்கலைக்கழக
வேந்தர்கள், சமய பெரியார்கள்
கலந்து கொள்ள
இருப்பதாக நிகழ்வு
ஏற்ப்பாட்டாளர் ஈப்போ ஆசிரியர் மணி இரா.மாணிக்கம்
தகவல் தெரிவித்தார்.

மலேசிய உயர் நீதி மன்ற முதன்மை நீதிபதி மேன்மைமிகு டான் ஸ்ரீ டத்தோ நளினி பத்மநாதன் அம்மையார் குத்து விளக்கேற்றி வைக்கும் இந்த நிகழ்வில் முன்னாள் ஈப்போ அரசினர்த் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் தமிழ்ப்பணி செல்வர் ஆசிரியர் வழிகாட்டி திரு. ஜே.ஆர்.நடராஜா,அமரர் மூத்த தமிழாசிரியர் திலகம் திரு பி.எஸ்.கோவிந்தன்
மற்றும் மூத்த தமிழ் ஆசிரியை பழம் பெரும் எழுத்தாளர் திருமதி கமலாட்சி ஆறுமுகம் ஆகியோர் சமூக பணிகளுக்காக சிறப்பிக்கபடுவர்
என்றார்.



