
ம.இ.காவின் தேசிய உதவித்தலைவராக தான்ஸ்ரீ் எம்.இராமசாமி நியமனம்
ஈப்போ,அக்.8-
பேராக் மாநில ம.இ.கா தலைவர் தான்ஸ்ரீ எம். இராமசாமி தேசிய உதவித்தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு பேராக் மாநில ம இ கா வின் செயலாளர் கோ.சண்முகவேலு மாநில ம.இ.கா சார்பில் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நியமனம் பேராக் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்.இவ்வேளையில் ம இ கா வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோருக்கு பேராக் ம இ கா தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி 9.10.2024 பேராக் ம.இகாவின் நியமனப் பதவிகள் குறித்து மாநிலத்தலைவரும், உதவித்தலைவருமான தான்ஸ்ரீ எம். இராமசாமி அறிவிப்பு செய்யவுள்ளார். பேராக் மாநிலத்தலைவர் தேசிய உதவித்தலைவராக நியமனம் செய்யபட்டதற்கு ஒட்டுமொத்த பேராக் ம..இ.காவினர் மகிழ்ச்சிகரமாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.



