
Malaysia
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமை ம.இ.கா இளைஞரணி வங்காளதேச தூதரகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மகஜர் வழங்கும்
கோலாலம்பூர்,டிச.19-
வங்காளதேசத்தில் இந்து மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்கொடுமைகளுக்கு எதிராக ம.இ.கா இளைஞரணி வங்காளதேச தூதரகத்தில் ஆட்சேப மகஜர் ஒன்றை வழங்கவுள்ளது.
ம.இ.கா இளைஞரணி தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தலைமையில் இளைஞரணியை சேர்ந்தவர்கள் பிற்பகல் 2 மணிக்கு இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மகஜர் வழங்கவிருக்கின்றனர் என்று ம.இ.காவின் ஊடகப் பிரிவு தலைவர் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
வங்காளதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்கொடுமையை பார்த்துக் கொண்டு ம.இ.கா சும்மா இருக்காது என்பதால் இந்த ஆட்சேப மகஜர் வழங்கும் நிகழ்வில் ம.இ.கா இளைஞரணி, பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி சிவசுப்ரமணியம் அழைப்பு விடுத்துள்ளார்.



