
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மலேசிய பொருந்திட்டதில் ம.இ.கா வின் பங்களிப்பு இருக்கும் -டத்தோ ஸ்ரீ எம் சரவணன் சூளுரை
கோலாலம்பூர், டிச.19-
13ஆவது மலேசிய பெருந்திட்டம்
2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த 13ஆவது மலேசிய பெருந்திட்டத்தில்
இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் நலன்கள் தொடர்பில் மஇகா தனது எட்டு அம்சங்களை சமர்ப்பிக்கும் என்று மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் நுட்பம், மகளிர் மேம்பாடு, சமூக சீர்கேடுகள், தொழில் திறன் கல்வி, பொருளாதார மேம்பாடு தொடர்பில் சில அம்சங்களை திட்டமிட்டு பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியிடம் மஇகா முன் வைக்கும் என்று அவர் சொன்னார்.
ஒவ்வொரு மலேசிய பெருந்திட்டத்திலும் இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மஇகா பரிந்துரைகளை முன் வைத்துள்ளது கடந்த 12வது பெருந்திட்டம் வரை அந்த பங்களிப்பு உள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த முன்னெடுப்பு ம.இ.கா திட்டமிடும். காரணம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டை இதுவரை வரைவு செய்த கட்சி என்ற அடிப்படையில் இந்த முன்னெடுப்பு செய்யப்படும் என்றார் டத்தோஸ்ரீ சரவணன்.
அந்த வகையில் 13ஆவது மலேசிய பெருந்திட்டத்திலும் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யும் வகையில் மஇகா எட்டு அம்சங்களை முன் வைத்துள்ளது என்றார் அவர்.
இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டாக்டர் நெல்சன்,செயலாளர் டத்தோ ஆனந்தன் , நிர்வாக செயலாளர் டத்தோ டாக்டர் குமாரராஜா, ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம், மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ முனியாண்டி, டத்தோ ஆர்.டி. ராஜா கல்வி மான்கள், பல துறை சார்ந்த ஆய்வாளர்கள், இதில் கலந்துக் கொண்டனர்.



