
தம்போய் MS GOLD நகைக்கடையில் கும்பல் எண்ணை எழுதிய சந்தேகநபர் 48 மணிநேரத்தில் பிடிபட்டாரா?
ஜொகூர்,டிச.21-
ஜொகூர், தம்போய் MS GOLD நகைக்கடையில் கும்பல் எண்ணை சாயம் பீய்ச்சி எழுதிய இருசந்தேக நபர்களை காவல்முறையினர் 48 மணிநேரத்தில் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தம்போய் MS GOLD நகைக்கடையில் இருசந்தேக நபர்கள் போத்தலில் இருந்து சாயத்தை பீய்ச்சி அடித்து கேங் எண்ணை எழுதும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அந்த இரு சந்தேக நபர்கள் கடையில் சாயத்தை பீய்ச்சினர்.

அந்த வீடியோ பதிவின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் 48 மணிநேரத்தில் அதாவது டிசம்பர் 20 அதிகாலையில் அந்த இருசந்தேக நபர்களையும் கைது செய்ததாக ஜொகூர் காவல்முறை வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
தம்போயில் அண்மையில் திறப்புவிழா கண்ட MS GOLD நகைகடையின் பிரதான இரும்பு கதவு மீது இரு சந்தேக நபர்கள் கும்பல் எண்ணை சாயம் பீய்ச்சி எழுதுவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த விவகாரம் தொடர்பில் 48 மணிநேரத்தில் அந்த சந்தேக நபர்களை கைது செய்த போலீசார் இந்த கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் இதில் தொடர்புடைய கும்பலை தேடி வருவதாகவும் தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு தண்டனை பெறுவது திண்ணம் என்று தெரியவந்துள்ளது.



