Malaysia

வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான எதிரான வன்கொடுமை ம.இ.கா இளைஞர் பிரிவு தூதரகத்தில் ஆட்சேப மனு

கோலாலம்பூர்,டிச.21-
வங்காளதேசத்தில் இந்து மக்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து ம.இ.கா இளைஞர் பிரிவினர் அதன் தலைவர் அர்வின் கிருஷ்ணன், துணைத் தலைவர் கேசவன் கந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

வங்காளதேச இடைக்கால அரசாங்கம் உடனடியாக தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் கோரிக்கை விடுத்த ம.இ.கா இளைஞரணி தலைவர் அர்வின் கிருஷ்ணன் தலைமையில் மலேசியாவுக்கான வங்காளதேச தூதரகத்தில் ஆட்சேப மகஜரை வழங்கியது.
இதில் ம.இ.கா தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் கேசவன் மற்றும் இளைஞர் அணியினர் வங்காள தேச தூதரகத்தின் முன் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான அரசாங்கம் ஆகஸ்ட் 5ஆம் தேதி கவிழ்ந்தபின், இந்துக்கள் உட்பட சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில்
தினசரி சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை உச்சக் கட்டத்தை அடைந்து உள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை இடைக்கால அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் அமைப்புக்கள், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button