Malaysia

மஸ்ஜிட் இந்தியா 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் உடைபடுகிறதா? மார்ச் 20 வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பு

கோலாலம்பூர், மார்ச் 19-
மஸ்ஜிட் இந்தியாவில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக
தகவல் கசிந்துள்ளது

அந்த நிலம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் ஒரு ஆலயம் 130 ஆண்டுகள் அங்கு இருக்கும் பட்சத்தில் அந்த நிலத்தை ஆலயத்திற்கு வழங்குவதில் என்ன தவறு? அந்த நிலத்தை ஆலயத்திற்கு வழங்காதது ஏன் என்று ஆலய நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த ஆலயத்தில் இப்படி ஒரு பிரச்சினை தலைதூக்கிய நிலையில் மடானி அரசாங்கத்தில் பதவி வகிக்கும் இந்திய தலைர்கள் யாரும். வாய்திறக்கவில்லையா? மடானி அரசாங்கத்தில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? அமைச்சர், துணையமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் எனும் கேள்வி மக்கள் மனதில் குறிப்பாக இந்தியர்கள. மத்தியில் எழுந்துள்ளது.

கூட்டரசு பிரதேச ஆலயம் மற்றும் தமிழ்ப்பள்ளி விவரகாரத்திற்கு பொறுப்பு வகித்துள்ள பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் என்ன சொல்லப் போகிறார்?

இந்த ஆலய விவகாரத்தில் மக்களுக்கு தெளிவு வழங்க வேண்டிய கடமை இந்திய தலைவர்களுக்கு உண்டு. அந்த ஆலயம் உடைக்கப்படும் என்ற தகவல் உண்மையா?

இந்த ஆலய விவகாரம் தொடர்பாக மார்ச் 20 வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் டத்தோ அம்பிகா சீனிவாசன் தலைமையிலான lawyer for liberty வழக்கறிஞர் குழு ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தவிருப்பதாக ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் வழக்கறிஞர் குழு இந்த ஆலயம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவலைகளை தெரிவிக்கப் போவதாக தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button