Malaysia

யாயாசான் அகால் பூடி” கட்டுரை தொடர்பாக மலேசியாகினிக்கு எதிரான அவதூறு வழக்கை துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி மீட்டுக் கொண்டார்

கோலாலம்பூர்,ஜூலை 18-
“யாயாசான் அகால் பூடி” கட்டுரை தொடர்பாக மலேசியாகினிக்கு எதிராக கடந்த 2021 மார்ச் 21ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கை துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி மீட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் முன்னணி இணைய செய்தி ஊடகமான மலேசியாகினிக்கு எதிரான இந்த அவதூறு வழக்கு கடந்தாண்டு செப்டம்பர் 4ஆம் தேதி குற்றவியல் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு இணங்க அவதூறு வழக்கை மீட்டுக் கொண்டதாக டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறான கட்டுரைகள் இடம்பெறாமல் தடுப்பதை மலேசியாகினி போன்ற ஊடகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று முகநூல் பதிவில் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button