Malaysia

பத்தாங் பெர்ஜூந்தை, சுங்கை டாரா கல்லுக்குழி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நிறைவடைந்தது தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் உள்ளிட்டவர்களுக்கு ஆலய தலைவர் இராமகணேசன் நன்றி

பத்தாங் பெர்ஜூந்தை,டிச.22-
சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த
பத்தாங் பெர்ஜூந்தை ஸ்டார்த்மோர் கல்லுக்குழி
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆலயத் தலைவர் திரு.இராமகணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் திருப்பணி 8 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிவடைந்து கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு லட்சம் வெள்ளியும் டத்தோஸ்ரீ சரவணன் ஒரு லட்சம் வெள்ளியும் நன்கொடை வழங்கினர். மேலும் பலரும் நன்கொடை வழங்கியிருந்தனர். இந்த கும்பாபிஷேகம் தடையின்றி மிகவும் சிறப்பாக நடைபெற உதவிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் இருவருக்கும் இராமகணேசன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்த பத்தாங் பெர்ஜூந்தை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் 130 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஆலயமாகும். அந்த காலத்தில் தோட்ட மக்களால் நிறுவப்பட்ட இந்த ஆலயம் காலங்காலமாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆலயம் கும்பாபிஷேகம் கண்டுள்ளது.

இந்த கும்பாபிஷேகத்தில் டத்தோஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார். இந்நிலையில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மண்டலாபிஷேக பூஜையில் கலந்து கொண்டார். ஆலயத்திற்கு வருகை புரிந்த தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கும்பமரியாதையுடன் வரவேற்றார்.

இந்த ஆலயம் கடந்த 8 ஆண்டுகளாக திருப்பணி கண்டு வருகிறது. தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு லட்சம் வெள்ளி வழங்கியிருந்தார். டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஒரு லட்சம் வெள்ளி வழங்கினார். தான்ஸ்ரீ சுப்ரமணியம் ஒரு லட்சம் வெள்ளியும் வழங்கினார். Gula Perak மற்றும் இதர தலைவர்கள் வழங்கிய பணத்தை கொண்டு 20 லட்சம் வெள்ளி செலவில் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக ராமகணேசன் கூறினார்.

பத்தாங் பெர்ஜூந்தை சுற்று வட்டாரத்தை சேர்ந்த தோட்டப் பாட்டாளிகளுக்கு முக்கிய ஆலயமாக கருதப்படும் இந்த கோவில் ஒரு தாய்க் கோவிலாக விளங்கி வருவதாக ராமகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button