Malaysia

இளைஞர்களுக்கு‌ பயனான திட்டமிடல் நுட்பங்கள் பயிலரங்கத்தில்‌ 80 பேர் பங்கேற்பு

ஈப்போ,ஜன.2-
ஒரு‌ நிகழ்வு அல்லது திட்டங்களை செயல்படுத்த தேவையான‌ விஷயக்களை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும்‌ நோக்கத்தில் ஈப்போ கருடா ஓட்டப் பந்தைய சங்கமும் மலேசியா உங்குல் சாசியா மேம்பாட்டு சங்கமும் இணைந்து திட்டமிடல் நுட்பங்கள் பயிலரங்கத்தை நடத்தினர்‌.

இந்த பயிலரங்கம் மனிதவள‌ அமைச்சின் எச்.ஆர்.டி. கோர்ப் ஆதரவில் நடைபெற்ற வேளையில் 80 பேர் பங்கேற்றனர்.

இந்த பயிரங்கத்தை ரேபிட் எக்சல் சென். பெர்ஹாட் நடத்த அதனை பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் தொடக்கி வைத்தார்.

மேலும் உரையாற்றிய‌ சிவகுமார், இந்த காலக்ககட்டத்தில் திட்டமிடல் என்பது முக்கியமான‌ திறனாகும். எல்லா விஷயங்களிலும் திட்டமிடல் இருந்தால்‌ தான்‌ வெற்றியை நோக்கி‌ செயல்பட முடியும் என்றார்..

இதனிடையே, ஈப்போ கருடா‌ ஓட்டப்பந்தைய சங்கத்தின் தலைவர், கிருஷண்ன் பேசுகையில் பங்கேற்பாளர்களுக்கு இந்த பயிலரங்கம் பெரிதாக உதவும்‌
என்றார்.

இது‌ போன்ற‌ பயிலரங்கம் இளைஞர்களுக்கு அவசியம்.‌மேலும் வாய்ப்பளித்த மனித வள அமைச்சிக்கு நன்றி கூறினார்.

தொடர்ந்து‌ வரும் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதிவரை இந்த‌ பயிலரங்கம் அதே இடத்தில் தொடரும் என அவர் குறிப்பிட்டார்

இந்த பயிலரங்கத்தில் மலேசியா உங்குல் சாசியா மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர், நந்தகுமார் சந்திரமோகன், ஈப்போ கருடா ஓட்டப்பந்தைய சங்கத்தின் செயலாளர் எம் முனுசாமி முக்கிய‌ பங்காற்றினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button