
பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதிக்கு ஆதரவாக பேரணியை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
ஈப்போ, ஜன.3-
வரும் 6 ம் தேதி, மேனாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மேல் முறையீட்டை ஆதரிக்கும் பொருட்டு பேரணி ஒன்று புத்ரா ஜெயாவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பேரணியில் பொதுமக்கள் கலந்துக்கொள்ள வேண்டாம் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக மலேசிய சட்டத்துறை துணையமைச்சர் எம்.குலசேகரன் இங்குள்ள ” பேர் பார்க்” அரினா கெபாயாங் குடியிருப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
யார் சிறையில் இருந்தாலும் அரசு மன்னிப்பை மாமன்னர் என்ற அடிப் படையில் தம்மிடம் முறையிடப்படும். அதனை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கையை தம் தரப்பினர் செய்வார்கள். ஆகையால், இம்மாதிரியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முறைப்படி கடிதம் வாயிலாக தொடர்புக்கொள்ளும்படி மாமன்னரின் ஆலோசனையை அவர் சுட்டிக்காட்டினார்.
அதைத் தவிர, மாற்று வழிகளை பையாள்வது ஏற்புடையதல்ல. இதனால் பல தரப்பினர் பல வகையான பாதிப்புகளை எதிர்நோக்கலாம். பேரணி போன்ற நடவடிக்கைகள் தவிர்க்க பட வேண்டிய ஒன்றாகும் என்று அவரது அறிவுரையை பொதுமக்கள் பின்பற்றி நடப்பது சிறந்த பண்புநலனாகும் என்று குலா குறிப்பிட்டார்.
ஆகையால், பொதுமக்கள் மாமன்னரின் ஆலோசனையை பின்பற்றி செயல்படுவது சிறந்த பண்பாகும். இந்நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் பேர ரசரின் அறுவுரை அல்லது ஆலோசனையை பின்பற்றி நடப்பது அவருக்கு நம் வழங்கும் மரியாதை மற்றும் கெளரமாகும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தம் கருத்தை பதிவு செய்தார்.
இங்குள்ள அரினா கெப்பாயாங் மக்களில் சுமார் 60 குடும்பத்தார் வெள்ளத்தால் கடந்த டிசம்பரில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் பணமுடிப்பும் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இம்மா



