
முன்னாள் பேரரசர் சுல்தான் அப்துல்லா வெளியிட்ட வீட்டுக்காவல் உத்தரவை மூடி மறைத்தது ஏன்? யாரை துணையமைச்சர் ஆக்குவது என்று அன்வாருக்கு தெரியவில்லை பிரார்த்தனை கூட்டத்தில் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆவேசம்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
பத்துமலை, ஜன.6-
முன்னாள் பேரரசர் சுல்தான் அப்துல்லா டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு வழங்கிய வீட்டுக்காவல் உத்தரவை தற்போதைய அரசாங்கம் மூடி மறைத்தது ஏன் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டத்தோஸ்ரீ நஜீப் குற்றவாளியா? இல்லையா? என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஆனால், அந்த வீட்டுக்காவல் உத்தரவை தற்போதைய அரசாங்கம் மூடிமறைத்தது ஏன்? அந்த கடிதம் வந்ததை உறுபடுத்தி சொல்லியிருக்கலாம். அதை வெளியே சொல்லாமல் மூடிமறைத்ததற்கு என்ன காரணம் என்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் பிராரத்தனை கூட்டத்தில் உரையாற்றிய போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு கேட்டார்.

இந்திய சமுதாயத்திற்கு டத்தோஸ்ரீ நஜீப் எவ்வளவோ உதவிகள் செயதிருக்கிறார். அதன் நன்றி கடனாக நாம் இங்கு கூடியிருக்கிறோம். நாங்கள் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், இங்கு 3,500 பேர் கூடியிருப்பது டத்தோஸ்ரீ நஜீப்பிற்கான பிளவுபடாத ஆதரவை எடுத்து காட்டுகிறது என்றார் டத்தோஸ்ரீ சரவணன்.
இந்த சிறப்பு பூஜை, பிரார்த்தனையை ஆலயத்தில் நடத்தாமல் அக்கா வீட்டு குசினியிலா நடத்துவது என்று டத்தோஸ்ரீ சரவணன் கிண்டலடித்தார். ம.இ.கா ஆலயத்தில் நடத்தும் பிரார்த்தனையை புனிதம் கெட்டுவிடுவது போல் பேசுகிறார். அவர் புனிதவதி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் பேசாமல் தன் பெயரை புனிதவதி என்று மாற்றிக் கொள்ளலாம். எல்லாம் என் நண்பர் அன்வாரை சொல்ல வேண்டும். யாரை துணையமைச்சராக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
இந்த நஜீப்பிற்கான சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை கூட்டத்தில் 3,500 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக பத்துமலை விநாயர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு பத்துமலை திருத்தல மண்டபத்தில் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



