
சமுகம், தமிழ், சமயம், தமிழிசை, கல்வி, இயல் இசை நாடகம், மகளிர் போன்ற துறையில் அர்ப்பணித்து கொண்டு நற்ப் பணியாற்றிய ஒன்பது ஆளுமை தக்கார்களுக்கு ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றம் விருதுகள் வழங்கி கௌரவிப்பு
சமுகம், தமிழ், சமயம், தமிழிசை, கல்வி, இயல் இசை நாடகம், மகளிர் போன்ற துறையில்
அர்ப்பணித்து கொண்டு நற்ப்
பணியாற்றிய ஒன்பது ஆளுமை தக்கார்களுக்கு ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றம் விருதுகள் வழங்கி கௌரவிப்பு
ஈப்போ,ஜன.6-
ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்ற
வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்த
விருந்துபசரிப்பு நிகழ்வில் பத்துகாஜா நாடாளமன்ற உறுப்பினர் சிவகுமார் வரதராஜு யாவருக்கும்
பொன்னாடை போர்த்தி சிறப்பு
செய்தார்.
பேரா மாநில கல்வி இலாகா
தமிழ்ப்பள்ளி துணை இயக்குனர் அர்ஜுணன் முனி
யாண்டி, அவர்களின் அருந்தமிழ் தொண்டினை பாராட்டி, “முத்தழிழ் சுடர்’, எனும்
விருது வழங்கப்பட்டது.
தமிழ்த் தொண்டினை அவ்வப்
போது செய்து வரும் பெர்ச்சாம்
திருமதி இளவரசிஅருணாசலம் “அவர்களுக்கு ‘மகளிர் திலகம்’
என்ற விருது கொடுக்கப்பட்டது.
சமய தொண்டுகளை பாராட்டி
சித்தியவான் கதிரவன் சுப்பையா அவர்களுக்கு ” அருட் செல்வர்’ எனும் விருது பெற்
றார்.
இளம் வணிகர் குமாரசாமி
செல்லதுரை என்பவரின் தமிழி
சை பங்களிப்பை மதிக்கும்
வகையில் அவருக்கு ‘ தமிழிசை வாணர் ‘ எனும் விருதுக்
குரியவராக விளங்கினார்.
கல்வி தொண்டில் தனககு
உரிய பாணியில் பங்களிப்
பை வழங்கி வந்த தேசிய வகை சிலிம் ரீவர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் பழனி சுப்பையா ‘முத்தமிழ் வேந்தன்’ எனும்/விருதுக்குரியவராக மிளிர்ந்தார்.
மகளிர் சேவையை பாராட்டி
கோப்பெங் சேவகி டாக்டர் சித பழனியம்மாள் பெரியசாமி
‘ மகளிர் மாமணி ‘ எனும்
விருது பெற்றார்
மனித நேயர் தொண்டினை
பாராட்டி ஈப்போ ஸ்ரீ நவஜோதி உணவக உரிமையாளர் இராமலிங்கம் பிச்சையா
என்பவருக்கு தொண்டர் மணி’
எனும் விருது கொடுக்கப்
பட்டது.
சமுக தொண்டில் தம்மை
ஈடுபடுத்தி செயல்படும் யுவராஜன் பாலையா என்ப
வருக்கு இளைய செம்மல்
யுவராஜன் பாலையா
ஈப்போ எம்.சி.ஐ எஸ் நிறுவனம்
சேர்ந்த கோவிந்தராஜு அவர்
களின் சமுக தொண்டினை முன் வைத்து ” சேவை செம்மல்’
விருது கொடுக்கப்பட்டது.
இதனிடையே, ஈப்போ முத்தமிழ்
பாவலர் மன்றம் தொடங்கியு
ள்ள முத்தமிழ் நிதியம் தமிழ்ப்
பள்ளி மாணவர்களின் பொரு
ளாதார சுமையை குறைப்ப
தற்க்கு வகை செய்யும் என
அதன் தலைவர் கவி ரத்னா
டாக்டர் அருள் ஆறுமுகம்
கண்ணன் நம்பிக்கை
தெரிவித்தார்.



