Malaysia

கம்பார் மாவட்ட 4 தமிழ்ப்பள்ளிகளின் 143 மாணவ செல்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்க்கான பள்ளி கட்டணம் கம்பார் தமிழர் சமூக நலன் முன்னேற்ற சங்கம் உதவி

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

கம்பார், ஜன.18-
கம்பார் தமிழர் சமூக நலன் மற்றும் முன்னேற்ற சங்கம் தனது ஆண்டு நடவடிக்கையாக கம்பார் மாவட்ட நான்கு தமிழ்ப்பள்ளிகளின் மொத்தம் 143 மாணவர்களுக்கு
இவ்வாண்டிற்க்கான பள்ளி கட்டண செலவினை ஏற்று
பாராட்டை பெற்றது.

ஏறக்குறைய பத்தாயிரம் வெள்ளியை
தேசிய வகை கம்பார் ( 36 மாண
வர்கள்) தேசிய வகை மெதடிஸ்ட் மாலிம் நாவார் ( 30 மாணவர்கள்)
தேசிய வகை மம்பாங் டி அவான் ( 47 மாணவர்கள்)
தேசிய வகை கம்பார் தோட்டம் ( 30 மாணவர்கள்)
போன்ற தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு கொடுத்து தனது
பரிவை வெளிப்படுத்தியது

தத்தம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி கட்டணத்தை கம்பார் தமிழர் சமூக நலன் மற்றும் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பெரியவர் நடராஜா பெரியசாமி தத்தம் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைத்தார்

தேசிய வகை கம்பார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரி
யர் திரு எம் கிருஸ்ணன், தேசிய வகை மெதடிஸ்ட் மாலிம் நாவார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு ஜெ.எஸ். சந்தன ராஜ், தேசிய வகை மம்பாங் டீ அவான் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு எம்.சிவசங்கர், தேசிய வகை கம்பார் தோட்டம் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி கே.
தமிழரசி ஆகியோரின்
அற்ப்பணிப்புகள்
பாராட்டப்பட்டது.

மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி விரையா என்ற ஷாசா அவர்கள் சிறப்பு செய்யப்பட்டார்

சிறப்பு அழைப்பாளர்
தேசிய வகை துரோனோ தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி இராஜேஸ்வரி சுப்ரமணியம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button