Malaysia

கோல குபு பாரு சட்டமன்றத் இடைத்தேர்தல் வெற்றிக்கு அனைத்து தரப்பினரும் பாடுபட்டுள்ளனர் ம.இ.காவின் பங்கு அலப்பரியது பாப்பாராயுடு கருத்து

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கெர்லிங், மே 15-

கோல குபு பாரு சட்டமன்றத் இடைத்தேர்தல் வெற்றிக்கு நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் மஇகா, மைபிபிபி, ஐபிஎப் உட்பட பல கட்சிகள் கடுமையாக பாடுபட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.

இதில் குறிப்பாக மஇகா தேசியத் தலைவர் தான்ஶ்ரீலச. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் உட்பட பல தலைவர்கள் தங்களுடன் இணைந்து செயல்பட்டதால் நம்பிக்கை கூட்டணியின் இந்த வெற்றிக்கு அனைவருமே காரணம் என்று கெர்லிங்கில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பாப்பாராயுடு செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த சூழலில் கோல குபு பாரு சட்டமன்றத் தேர்தல் வெற்றியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இந்த வெற்றிக்காக அனைவரும் பாடுபட்டுள்ளனர். இந்த வெற்றிக்கு கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமைதான் மூலகாரணம் என்று பாப்பாராயுடு சொன்னார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் கடந்த மே 11ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவ் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு அனைத்து தரப்பினரும் முக்கிய காரணம். இந்த வெற்றியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பாப்பாராயுடு குறிப்பிட்டுள்ளார்.

கோல குபு பாரு சட்டமன்றத் தேர்தலில் நான் வாக்குறுதிகள் எதனையும் கொடுக்கவில்லை.
ஆனால், பிளாட்டா ரீவர் உள்ளிட்ட தோட்டப் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வை காண வேண்டும் என்று பாப்பாராயுடு மேலும் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button