Malaysia

Era FM வானொலிக்கு 250,000 வெள்ளி அபராதம் எம்சிஎம்சி அறிவிப்பு

Era FM வானொலிக்கு 250,000 வெள்ளி அபராதம்

எம்சிஎம்சி அறிவிப்பு

 

கோலாலம்பூர், மார்ச் 11-

Era FM வானொலி நிலையத்திற்கு 250,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படுவதாக மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி அறிவித்துள்ளது.

 

இந்த அபராதம் Era Fm வானொலி நிர்வாகம் Maestra Broadcastக்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், அவர்களின் லைன்சென்ஸ் ரத்து செய்யப்படவில்லை என்று MCMC அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.

 

இந்துக்கள் காவடி எடுப்பதை Era FM-இன் மூன்று அறிவிப்பாளர்கள் நடனமாடி கேலி செய்த காணொலி ஒன்று Era FM வானொலியின் சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் அது வைரலானதால் இந்துக்கள் கோபமடைந்தனர்.

 

இந்நிலையில் Maestra Broadcast-இன் உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பை எம்சிஎம்சி மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று Maestra Broadcast கேட்டுக் கொண்டிருந்த நிலையில் Era FMஇன் மூன்று அறிவிப்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தங்களின் செயலுக்கு மன்னிப்பு கோரியதால் எம்சிஎம்சி மேற்கொண்ட அபராதத்தை தெரிவித்திருந்து.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button