Malaysia

செத்தவன் வாயில் வெத்தலை பாக்கு” சில தலைவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் சாடினார் டத்தோஸ்ரீ சரவணன்

“செத்தவன் வாயில் வெத்தலை பாக்கு”

சில தலைவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்

சாடினார் டத்தோஸ்ரீ சரவணன்

 

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

ஒளிப்பதிவாளர்

ஹரி ஸ்ரீநிவாஸ்

 

கோலாலம்பூர், மார்ச் 11-

நாட்டில் இந்திய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில தலைவர்கள் “செத்தவன் வாயில் வெத்தலை பாக்கு” போல்தான் இருக்கிறார்கள் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சாடியுள்ளார்.

இந்திய சமுதாயத்தில் என்ன நடந்தாலும் பேச மாட்டார்கள். இதனை “செத்தவன் வாயில் வெத்தலை பாக்கு” என்று சொல்வார்கள். சவத்தின் வாயில் வெற்றிலை வைத்தால் அது அப்படியேதான் இருக்கும். சில தலைவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று மலாய்மொழியில் பேசிய போது

டத்தோஸ்ரீ சரவணன் அப்படி சொன்னார். பிறகு தமிழ்மொழியில் பேசிய போதும் இதனையே தமிழில் சொல்லி சில தலைவர்களை சாடினார்.

ஜம்ரி வினோத் போன்ற சம்பவங்களால் பிரச்சினைகள் தொடர்கின்றன.

இது குறித்து இந்துக்கள் அனைவரும் புகார் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் நானும் புகார் செய்வேன்.

20 ஆயிரம் 30 பேர் புகார் செய்தால்தான் மக்களின் அதிருப்தி அரசாங்கத்திற்கு தெரியும் என்பதால்

அறிக்கைகள் விடாமல் தொடர்ந்து போலீஸ் புகார் செய்யும்படி டத்தோஸ்ரீ சரவணன் ஆலோசனை கூறினார்.

 

நாங்கள் மதத்தை வைத்து அரசியல் நடத்தவில்லை. மாறாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசியல்வாதியை நம்பி வருகிறார்கள். நாங்கள் நடவடிக்கையில் இருங்குகிறோம்.

நான் சமயம் மீது அக்கறை உள்ள ஒரு இந்து. நான் குரல் கொடுக்கிறேன். என்னால்

செத்தவன் வாயில் வெத்தலை வைத்தது போல் இருக்க முடியாது என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

 

இந்து மத பிரச்சினையை என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இதன் காரணமாகவே ஜம்ரி வினோத்தை விவாதமேடைக்கு அழைத்தேன். இதனை பலர் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்.

இது சமயம் சார்ந்த விவாதம் இல்லை. காவடி குறித்த விவாதம் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெளிவுபடுத்தினார்.

 

இந்த ஜம்ரி வினோத் விவகாரம் தொடர்பில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பினேன்

இந்த ஜம்ரி வினோத் விவகாரம் தொடர்பில் நமக்கு எதிர்ப்பாக இருந்தவன் கூட ஆதரவு தருகிறான்.

ஜம்ரி வினோத் விவகாரத்தில் அரசியல் கருத்துவேறுபாடுகளை மறந்து இந்தியர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.

 

அரசாங்கதின் ஆதரவு பெற்ற இந்தியர்கள்

அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். ஆகையால் இந்தியர்கள் தலைவர்களை நாடி வருகிறார்கள். தலைவர் என்ன செய்ய முடியும்?

செத்தவன் வாயில் வெத்தல மாதிரி இருக்க முடியுமா?

சில பேர் அப்படி இருக்கிறார்கள்.

என்னால் அப்படி இருக்க முடியாது. இந்திய சமுதாயம் தங்களின் குரலாக எங்களை நம்பியிருக்கிறார்கள் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button