
ஜம்ரி வினோத் உடனான விவாத மேடை Debat ரத்து இந்து மதத்தை தொடர்ந்து இழிவு படுத்தி வரும் ஷம்ரி வினோத் மீது கடும் நடவடிக்கை தேவை டத்தோஸ்ரீ எம் சரவணன் வலியுறுத்து
ஜம்ரி வினோத் உடனான விவாத மேடை Debat ரத்து
இந்து மதத்தை தொடர்ந்து இழிவு படுத்தி வரும்
ஷம்ரி வினோத் மீது கடும் நடவடிக்கை தேவை
டத்தோஸ்ரீ எம் சரவணன் வலியுறுத்த
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர் மார்ச் 11-
இந்து மதத்தை தொடர்ந்து இழிவு படுத்தி வரும் ஷம்ரி வினோத் மீது காவல் துறை – அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
ஷம்ரி வினோத் என்பவர் பல ஆண்டுகளாக இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.
இவர் மீது ஏற்கெனவே நூற்றுக்கணக்கான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அவருக்கு எதிராக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது இந்து சமயத்தை மிகவும் இழிவுபடுத்தி பேசி உள்ளார். இதற்கு நடவடிக்கை தேவை என்று பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் காரா சாரம் உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது டத்தோஸ்ரீ சரவணன் இதனை தெரிவித்தார்.
தைப்பூசத்தில் வேல் வேல் என்று காவடி எடுப்பவர்கள் பேய் பிடித்தகர்கள் மற்றும் கல் குடித்தவர்கள் போலும் போதையில் ஆடுகிறார்கள் என்று ஷம்ரி வினோத் கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஜம்ரி வினோத் மீது போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு எதிராக போலீஸ் புகார்களை செய்தவர்கள் நடவடிக்கை எடுக்கப்படாது குறித்து அரசியல் தலைவர்களிடம் முறையிடுகிறார்கள்.
சமுதாயத் தலைவர்கள் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி நானும் குரல் கொடுக்கிறேன்.
நானும் குரல் கொடுக்கவில்லை என்றால் அது செத்தவன் கையில் வெத்தலை பாக்கு வைத்ததை போல் ஆகிவிடும் என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
இதனிடையே ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அரோங் டாகாங், காவல் துறையினர் மற்றும் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆலோசனை பேரில் விவாதத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
இருப்பினும் ஷம்ரி வினோத் போன்ற போர்வழிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



