Malaysia

கங்காதரன் சிவபெருமான் ஆலயம் வேண்டும் சீனர் கோ போ சாய் கனவில் தோன்றிய சிவபெருமான் போட்ட கட்டளை

தேசம் செய்திகள் குணாளன் மணியம்,
ரேவதி குணாளன்,
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

பினாங்கு,ஜன.30-
தனக்கு ஒரு சிவன் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு சீனர் கோ போ சாய்
கனவில் தோன்றிய சிவபெருமான் போட்ட கட்டளையை நிறைவேற்ற மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் நடவடிக்கையை முன்னேடுத்துள்ளார்.

மலேசியாவில் மிகப்பெரிய கங்காதரன் சிவன் ஆலயம் ஒன்றை கட்டுவதற்கு சக்தி அறவாரியம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மலேசியாவில் ஆற்றங்கரையோரம் தர்ப்பணம் செய்யும் வசதிகளுடன் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சகலவசதிகளுடன் மூன்று ஆண்டுகளில் கட்டி முடக்கப்படும் என்று மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.

இந்த கங்காதரன் சிவன் ஆலயம் கட்டுவதற்கு சிவபெருமான் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்துள்ளேன். இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு சென்றிருந்த போது அறிமுகமே இல்லாத ஒரு சித்தர் என்னை அழைத்து, சிவன் கோயில் கட்டப்போகிறாயா? அது புண்ணியம். நடக்கும் என்று சொன்னதாக செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.

மலேசியாவிலேயே மிகப்பெரிய கங்காதரன் சிவன் ஆலயம் பட்டவொர்த்தில் 1 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் கட்டப்படவுள்ளது. இந்த ஆலயம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் நிலையில் இன்னும் ஒரு ஏக்கரில் மண்டபம், கோசாலை ஆகியவையும் அமைக்கப்படவுள்ளது.மேலும் ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்வதற்கான இடமும் அமைக்கப்படவுள்ளதாக பினாங்கு பிரபல லைட் ஹோட்டல் தங்குவிடுதியில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போது டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

ஆலயம் கட்டுவதற்கு 21 ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் ஆலயம் கட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். மலேசியாவிலேயே மிகப்பெரிய சிவனாலயம் இதுவாகும். காசி விஸ்வநாதர் ஆலயம் போல் இது அமையவுள்ளது. இதன் கருவறை முற்றிலும் கருங்கல்லால் வடிவமைக்கப்படவுள்ளது. நான்கு நிலை பிரதான கோபுரங்களுடன் மொத்தம் 9 கோபுரங்கள் கட்டப்படவிருப்பதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

இந்த ஆலயம் தற்போது இருக்கும் இடத்திற்கு வந்ததற்கு பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி முக்கிய பங்காற்றியுள்ளார். ஆலயத்திற்கு 2 ஏக்கர் நிலம் பெற்றுத் தந்தவர் பேராசிரியர் இராமசாமி ஆவார். இந்த ஆலயத்திற்கு பைலிங் அடிக்கும் வேலைகள் முடிந்து தற்போது அடித்தளம் அமைக்கும் வேலைகள் தொடங்கவிருப்பதாக டத்தோஸ்ரீ தனந்திரன் சொன்னார்.

இந்த கங்காதரன் ஆலயத்தில் 108 சிவலிங்கம், முருகன் சன்னதி, விநாயகர் சன்னதி, பைரவர் சன்னதி, கோசாலை, அன்னதான மண்டபம், கருமக்கிரிமை இடம் உள்ளிட்டவை கட்டப்படும். கடந்தாண்டு கெடாவில் மிகப்பெரிய சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தை கட்டி முடித்த நிலையில் தற்போது பினாங்கில் ஸ்ரீ கங்காதரன் சிவன் ஆலயத்தை கட்டும் முயற்சியை முன்னேடுத்துள்ளதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

இந்த ஆலயத்தின் 9 நிலை கோபுரத்தில் 300 சிலைகளும் 5 நிலை கோபுரத்தில் ஒவ்வொன்றிலும் 200க்கும் மேற்பட்ட சிலைகளும் இருக்கும். இந்த சிவன் ஆலயம் கட்ட திட்டமிடுவதற்லக்கு முன்பு கைலாசம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் சென்று வந்ததாக சொன்ன டத்தோஸ்ரீ தனேந்திரன் 3 ஆண்டுகளில் ஆலயம் கட்டி முடிக்கப்படும் என்றார்.

இந்த ஸ்ரீ கங்காதரன் ஆலய கட்டுமானப்பணிக்காக அண்மையில் பினாங்கு லைட் ஹோட்டலில் மாபெரும் சைவ விருந்துபசரிப்பு நடைபெற்றது. இதில் தான்ஸ்ரீ ரமேஷ், டத்தோ அருணாசலம், பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ.தினகரன் உள்ளிட்ட பிரமுகர்களுடன் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலயத்திற்கு நன்கொடை வழங்கவிரும்புகிறவர்கள் கீழ்க்காணும் கியூகோர்ட்டை ஸ்கேன் செய்து வழங்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button