Malaysia

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்க வேண்டும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கிறிஸ்மஸ் வாழ்த்து

கோலாலம்பூர்,டிச.25-
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டமான இந்த புனித நாளில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி அமைதி மற்றும் அன்பால் நிரம்பியதாக இருக்க வாழ்த்துவதாக ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்.

முதலில் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். வருட இறுதி வந்தாலே அது கொண்டாட்டங்கள் நிறைந்த மாதமாக இருக்கிறது. பொது விடுமுறை, சொந்த விடுமுறை என்று பலரும் வெளியூர்களுக்குப் பயணிப்பதும் உறவுகளைச் சந்திப்பதும் ஒன்று கூடுதலும் விழாக்களைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில் நிறைந்து காணப்படுகிறது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் அதன் தொடர்ச்சியாக ஆங்கிலப் புத்தாண்டு. உலக மக்கள் அனைவருமே கொண்டாடும் ஒரு புத்தாண்டாக இந்த ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிறது. அந்த வகையில் தொடர்ச்சியான இந்த கொண்டாட்டங்களோடு பாதுகாப்பாகவும் உறவுகளோடு மகிழ்ச்சியாகவும் கொண்டாட மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது கிருஸ்மஸ் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button