Malaysia

மக்கள் பணம், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் தமிழ் பாலர் பள்ளி, சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்காக மித்ரா நிதி ஒதுக்கப்பட்டது பிரபாகரன் அறிவிப்பு

கோலாலம்பூர்,ஜூன் 25-
மக்கள் பணம், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மித்ராவின் திட்டங்கள் இருக்கும் என்று .
மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பிரபாகரன் இதனை கூறினார்.

அந்த வகையில் மித்ராவின் இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதில் தமிழ் பாலர் பள்ளிகளுக்காக 10.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிதியின் வாயிலாக கிட்டத்தட்ட 4,500 மாணவர்கள் பயன்பெறவுள்ளதாக பிரபாகரன் தெரிவித்தார்.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு கூட்டம் திங்கட்கிரமை மக்களவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

12 மாதங்களுக்கான கட்டணம், உணவு ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படும். ஒரு மாணவருக்கு குறைந்தது 150 முதல் 200 ரிங்கிட்டை பெறுவார்கள் என்று பிரபாகரன் சொன்னார்.

இரண்டாவது திட்டமாக சிறுநீர் சுத்திகரிப்புக்காக 7.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு 10 ஆயிரம், ஊசிக்கு 2,100, ரத்த பரிசோதனை 200, போக்குவரத்துக்கு 1,500 என மொத்தம் ஒருவருக்கு 15,000 ரிங்கிட் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 500 பேர் பயன் பெறுவார்கள் என்று பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டங்களுக்கு முறையாக விண்ணப்பித்து இந்திய சமுதாயம் பயன் பெற வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button