
Malaysia
கேலியாக பாடி இழிவு படுத்திய அறிவிப்பாளர்கள் மீது நிந்தனை சட்டம் பாயுமா?
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, மார்ச் 5-
தைப்பூச பண்டிகையை
அவமதிக்கும் வகையில்
வேல் வேல் என்று கேலியாக பாடி இழிவுப்படுத்திய ERA FM வானெலி நிலைய அறிவிப்பாளர்களின் செயல் முன்னிறுத்தி அவர்கள் மீது நிந்தனை சட்டம் பாய வேண்டும்
என இரு இயக்கங்களின் தலைவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.
மலேசிய வீரத் தமிழர் மேம்பாட்டு மற்றும் சமுக நலன்
இயக்கத் தலைவர் பார்த்திபன் சரவண பெருமாள்
மற்றும் பேராக் தமிழ்ப்பள்ளி குழு தலைவர் பெரு டி. நித்தியானந்தன்
ஆகிய இருவரும்
போலிஸ் துறையை கேட்டு
கொண்டனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக இரு இயக்கமும் ஈப்போ
மாவட்ட போலிஸ் துறையில் போலிஸ் புகார் செய்தனர்.



