Malaysia

பெண்கள் வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டின் மேம்பாட்டிற்குத் துடிப்போடு செயல்பட வேண்டும்  மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் மகளி்ர் தின வாழ்த்து

கோலாலம்பூர்,மார்ச் 7-

குடும்பத்திற்கு மட்டுமன்றி நாட்டிற்காகவும் உழைத்து வரும் பெண்ணின் ஆற்றல் போற்றப்பட வேண்டும் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் கூறினார்.

 

ஒரு பெண் குடும்பத்திற்கு மட்டுமன்றி நாட்டின் மேம்பாட்டுக்கும் பெரிய தூணாக திகழ்கிறாள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

அந்த வகையில் இந்த அனைத்துலக மகளிர் தினத்தில் (International Women’s Day) மகளிர்களின் சேவை போற்றுவதில் மகிழ்ச்சியடைவதாக ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்.

 

உலகெங்கும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாட பெண்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

ஒரு நூற்றாண்டு காலப் பெண்களுடைய போராட்டங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று ரத்னவள்ளி அம்மையார் சொன்னார்.

இதில் மிக முக்கியமாக பெண்களின் சாதனைகளை கொண்டாடவும், உலகில் நிலவிவரும் சமத்துவத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

மாறிக் கொண்டிருக்கும் உலகில், ஒரு பெண் தன்னை வளர்த்துக்கொண்டு துடிப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ரத்னவள்ளி அம்மையார் மகளிர்கள் அனைவருக்கும் மகளி்ரி தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button