Short News

வாங்காத கடனுக்கு ஆலோங் கொடுத்த பரிசு மூன்று கார்களுக்கு வர்ணம் தெறிப்பு

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, அக்-11
வாங்காத கடனுக்கு சட்டவிரோத வட்டி முதலைகளின் அடாவடித்தனத்தால் மூன்று கார்களுக்கு வர்ணம் தெறித்து சேதப்படுத்திய இரு சீன ஆடவர்களை தேடி வருவதாக பேராக்
போலிஸ் தலைவர் டத்தோ ஹாசீசி மாட் ஹாரிஸ் தெரிவித்தார்.

செப்டாம்பர் மாதம் 29 ஆம் தேதி அதிகாலை 3.55 மணியளவில் சித்தியவான் தாமான் முகிபா எனும் விலாசம் கொண்ட வீட்டில் இச்சம்பவம் நடந்ததாக தெரிவித்த அவர் மை வீ கார் மூலம் தலை.மறைவாகியதாக கூறினார்.

மன உலைச்சலுக்கு ஆளான ஆடவர் யாரிடமும் பணம் வாங்கியதில்லை என்றும் தமக்கு எதிரிகள் இல்லை என்றும் வாக்கு மூலம் கொடுத்திருப்பதாக சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button