Malaysia

மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் ம.இ.கா முயற்சியில் 48 மணிநேரத்தில் மாற்றுநிலம் பிரதமர்-அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு எல்.சிவசுப்ரமணியம் நன்றி

கோலாலம்பூர்,மார்ச் 25- மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அந்த இடத்திற்கு பக்கத்திலேயே மாற்றுநிலம் கிடைத்துள்ளதற்கு ம.இ.கா முக்கிய பங்காற்றியுள்ளதற்கு மக்கள் பலரும் ம.இ.கவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த மஸ்ஜிட் இந்தியா
தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் யாருக்கும் பிரச்சினை கையாளப்பட்டுள்ளது. அரசாங்கம் வழங்கிய ஆலோசனையின் பேரில் தற்போதைய ஆலய இடத்தில் இருந்து 50 மீட்டரில் 4 ஆயிரம் சதுரஅடி நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலம் கிடைப்பற்கு ம.இ.கா முக்கிய பங்காற்றியுள்ளது. இதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், ம.இ.கா தேதிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், இதில் முக்கியப்பங்காற்றிய ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு ம.இ.கா ஊடக பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்ரமணியம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நாட்டில் சர்ச்சையாக இருந்த இந்த மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்திற்கு தற்போது சுமுகமான தீர்வு கிடைத்துள்ளதற்கு அனைத்து தரப்பினரும் ம.இ.காவிற்கு நன்றி கூற வேண்டும் .அது போலவே மற்ற தலைவர்களும் முயற்சி எடுத்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பில் மார்ச் 25 செவ்வாய்க்கிழமை மாலை மதியம் 3 மணியளவில் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஜாலெஹா அலவலுவகத்தில் நடந்த கூட்டத்திற்கு பிறகு இந்த தீர்வு கிடைத்ததாக மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்திருந்த்தாக சிவசுப்ரமணியம் சொன்னார்.

இதற்கான உறுதி கடிதத்தை அமைச்சர் ஆலயத்தின் பிரதிநிதி பார்த்திபனிடம் வழங்கியுள்ளார். இதன் வாயிலாக அந்த ஆலயம் தொடர்ந்து மஸ்ஜிட் இந்தியாவில் செயல்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேநேரத்தில் தற்போது ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலத்திற்கு நிரந்திர நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த புதிய ஆலயம் கட்டி முடிக்கும் வரை தற்போதைய இடத்தில் ஆலயம் இயங்குவதற்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது பாராட்டத்தக்கது என்று சிவசுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

இது இந்திய சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. ஒற்றுமையாக இருந்தால் நாம்மால் சாதிக்க முடியும் என்பதை காட்டியுள்ளது.
இந்த வேளையில் அரசாங்கத்திற்கும், பிரதமருக்கும், கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் மற்றும் ஆலயத்தை பாதுக்காக துணை நின்ற எல்லோருக்கும் தாம் நன்றியை தெரிவித்து கொள்வதாக சிவசுப்ரமணியம் கூறினார்.

தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து பலரும் பலவாறாக தவறான கருத்து தெரிவித்த நிலையில் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களுடன் கலந்தாலோசித்து உண்மை நிலவலத்தை டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஊடகம் முன் அறிவித்ததை தொடர்ந்து 48 மணிநேரத்தில் நிலம் கிடைத்துள்ளதை சிவசுப்ரமணியம் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து அரசாங்கத்திடம் பேச்சு நடத்திய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் பேச்சு நடத்தியுள்ளனர். அவர்களுக்கும் மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button