Malaysia

வெள்ளிரத ஊர்வலம் விலாயா மாநில பிபிபி 10,000 பக்தர்களுக்கு அன்னதானம்

 

கோலாலம்பூர் பிப்.10-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று இரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளி ரதம் புறப்பட்டு பத்துமலை திருத்தலத்தை நோக்கி புறப்பட்டது.

வழி நெடுகிலும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளி ரத ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் .

விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன் தலைமையில் ஜாலான் டாங் வாங்கி சாலையில் மிகப்பெரிய தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா சிறப்பு வருகை புரிந்து தண்ணீர் பந்தலை அதிகரிப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர் பானமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button