Malaysia

செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் பிரச்சனைக்கு தீர்வு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே.ராமலிங்கம் இருவரும் இணைந்து பேசியதால் தீர்வு பிறந்தது

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர் செப்.11-
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே.ராமலிங்கம் இருவரும் இணைந்து பேசியதால் செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது

செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் பிரச்சனைக்கு இன்று நல்ல முறையில் தீர்வு பிறந்துள்ளது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவிலுக்கு செந்தூல் சிவன் கோவில் வரிசையில் ஒதுக்கப்பட்ட புதிய நிலத்தில் தற்காலிகமாக புதிய கோவில் நிர்மாணிக்கப்படும் என்று பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கோவிலுக்கு பக்தர்கள் வருகை தரும் வகையில் கோவில் முன் புறத்தில் புதிய பாலம் கட்டப்படும்.
மேலும் பக்தர்கள் வசதிக்கு ஏற்ப தற்காலிகமாக புதிய ஆலயம் கட்டப்படுகிறது.
புதிய கோவில் கட்டுவதற்கு அனைத்து உதவிகளும் வழங்குவேன் என்று என்று பிரபாகரன் தெரிவித்தார்.

ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம் மற்றும் நானும் ஒன்றாக இணைந்து நாகம்மாள் கோவிலை நல்ல முறையில் கட்டித் தருவோம். எனது நாடாளுமன்ற உறுப்பினர் மானியத்தில் இருந்து இந்த கோவில் கட்டுமான பணிக்கு உதவுவேன் என்று அவர் சொன்னார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் பிரச்சனைக்கு தீர்வு பிறந்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ல் மற்றும் எனது தலைமையில் இந்த கோவில் நல்ல முறையில் கட்டப்படும் என்பதோடு பிரபாகரன் தலைமையிலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே இராமலிங்கம் தெரிவித்தார்.

இந்த கோவில் பிரச்சினைக்கு இன்று நல்ல முறையில் தீர்வு பிறந்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டத்தோ இராமலிங்கம் சொன்னார்.

புதிய இடத்தில் மிகவிரைவில் கோவில் சிலைகள் இடம் மாற்றம் செய்யப்படும். எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இனி கட்டுமான பணிகள் மின்னல் வேகத்தில் தொடரும் என்று கோவில் செயலாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.

செந்தூல் மெட்ராஸ் கபே உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டத்தோ இராமலிங்கம், பிரபாகரன், ம இகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம், டத்தோ ராஜசேகரன் மற்றும் கோவில் செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button