Malaysia

உலு சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் தேர்தல் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் அமோக வெற்றி!

உலு சிலாங்கூர், ஏப்.13-
நாடு முழுவதும் கெஅடிலான் கட்சித் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் உலு சிலாங்கூர் தொகுதியில் நடைபெற்ற தொகுதி தலைவர் தேர்தலில் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற
தேர்தலில் முதல் முறையாக தொகுதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் சத்தியபிரகாஷ், இப்போது இரண்டாவது முறையாக அதேபதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த முறை மும்முனை போட்டி நடைபெற்ற நிலையில், அவர் 3,016 வாக்குகளை பெற்று, எதிரணியான ஜூன் லியோ (993 வாக்குகள்) மற்றும் கலைச்செல்வன் (609 வாக்குகள்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்.

அவருடன் சேர்ந்து போட்டியிட்ட சைபுடின் சஃபி துணைத் தலைவராகவும், முகமட் அலி உதவித் தலைவராகவும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் டாக்டர் சத்யா பிரகாஷ் – சைபுடின் அணி அனைத்து பதவிகளையும் கைப்பற்றி சிறப்பான சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button