
ஈப்போ லிட்டில் இந்தியா பகுதியில் “செல்லப்பா டி கடை” மக்கள் மத்தியில் பிரபலம்
ஈப்போ,ஏப்.14-
ஈப்போ மாநகரத்தின் மையப் பகுதியில் விளங்கும் லிட்டில் இந்தியாவின் அடையாளமாக தற்பொழுது “செல்லப்பா டி கடை” விளங்கி வருகிறது.
சுவையான பால் அப்பம்
சாப்பிட ஜோகூர் மாநிலத்திலிருந்து கூட
மக்கள் வருகையளிக்கின்றனர்.
அதிலும் டி கடையில் உட்கார்ந்து மாலை பொழுதை கழிப்பவர்களுக்கு செல்லப்பா டி கடை ஒரு மாளிகையே என்றால் அது மிகையில்லை.
பஜ்ஜி, போண்டா , வடை உட்பட பல பலகாரங்கள் மிகவும் சுவையாக இருப்பதாக மக்கள் மனம் திறந்து கூறுகின்றனர்.
பொதுவாக பினாங்கு மாநிலம் உணவுக்கு பிரசித்தியாக இருந்தது. இப்பொழுது ஈப்போ பேராக் மாநிலம் டி கடையில் பிரபலமாகி விட்டது என்றால் அது உண்மையே.
பணி முடிந்து தினசரி இங்கு வந்து டி உட்பட பூஸ்டுகளை அருந்தி வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
அதனுடன் , கோத்து பரோட்டா , தோசை உட்பட மக்கள் விரும்பும் அனைத்து உணவுகளும் இங்கேயே கிடைப்பதால் குடும்பத்துடன் சாப்பிட ஏதுவாக உணவகமாக செல்லப்பா டி கடை விளங்குகிறது.
தொடர்ந்து உணவு தரத்திற்கு ஏற்ப விலை நியாயமாக இருப்பது பாராட்டத்க்கது.
மாலை மதியம் தொடங்கி இரவு வரை செல்லப்பா டி கடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



