Malaysia

Kuil Haram என்று முத்திரை குத்த வேண்டாம்! இனத்துவேசத்திற்கு முடிவு கட்டுங்கள் – டத்தோ டி.மோகன் வேண்டுகோள்

பூச்சோங் ஏப்.13-
நாட்டில் இப்போது வரலாறு காணாத அளவுக்கு இனத்து வேசம் தலைத் தூங்கியுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோவில்கள் இப்போது சட்டவிரோத கோவில்கள் என்று முத்திரை குத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்று டத்தோ டி மோகன் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் மற்றும் காவல் துறையினர் இது தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் மற்றும் அதிகாரம் உங்கள் கையில் இருப்பதால் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றார் அவர்.

தோட்டங்களில் வாழ்ந்த இந்தியர்கள் கோவில்களை கட்டி வழிபட்டு வந்தனர்.

இப்போது தோட்டங்கள் கைமாறிவிட்டன. ஆனால் இந்த கோவில்களை Kuil Haram என்று சமூக வலைத் தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இவர்களின் அகப்பக்கத்தை அரசாங்கம் உடனே மூட வேண்டும் என்றார் அவர்.

பூச்சோங்கில் ஐந்து கிளைக் கூட்டங்கள் ஓரே நேரத்தில் நடைபெற்றது.
பூச்சோங் கேம்ப் விலேஜ் கிளைத் தலைவருமான டத்தோ டி.மோகன் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

பூச்சோங் தொகுதி தலைவர் முருகன், பூச்சோங் பிரிமா கிளைத் தலைவர் லெட்சுமி பிரபா, பூச்சோங் இண்டா கிளைத் தலைவர் சிவகாமி, தாமான் ஸ்ரீ ராமாய் கிளைத் தலைவர் அமிர்தராஜ்,தாமான் மூரா கிளைத் தலைவர் இந்திரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.

கோத்தா ராஜா தொகுதி துணை தலைவர் செளந்தரராஜன் ம.இ.கா தலைமையகத்தின் சார்பில் கிளைக் கூட்டங்களை நடத்தி வைத்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button