
MalaysiaInternational
இஸ்தானா நெகாராவில் சீன அதிபருக்கு அதிகாரப்பூர்வ அரச மரியாதை
கோலாலம்பூர், ஏப்.16-
இஸ்தானா நெகாராவில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கிற்கு அதிகாரப்பூர்வ அரச மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது.
சீன அதிபர் ஷீ ஜின்பிங் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் இஸ்தானா நெகாராவில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு வரவேற்பு நல்கப்பட்டது. அதிபரை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வரவேற்றார்.
இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பி்முகர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



