
MalaysiaInternational
பொருளாதார ரீதியில் மலசியா-சீனா உறவு மேம்படும்-மாமன்னர் நம்பிக்கை
கோலாலம்பூர், ஏப்.16-
மலேசியா- சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான அரச தந்திர உறவு மேம்படும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்

இருநாடுகளும் சவாலான அரசியல் சூழலில் தொடர்ந்து எல்லா துறைகளிலும் பரஸ்பரம் கொண்டு அதனை மேம்படுத்தும் என்று மாமன்னர் தெரிவித்தார்.
மலேசியா இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னேடுத்துள்ளது. இதில் பொருளாதார பலம், தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மலேசியா -சீனா ஆகிய இருநாடுகளும் பயனநடையும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாமன்னர் சொன்னார்.
மலேசியாவில் சீன முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம். இதில் குறிப்பாக ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு அம்சமாக கருதப்படுவதால் சீன முதலீட்டு நிறுவனங்கள் வரவேற்கப்படுவதாக மாமன்னர் கூறினார்



