
30 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் மலாக்காவில் கட்டி முடிக்கப்படும் ! கவிஅரசன் அன்பரசன்
மலாக்கா , ஏப்.19-
மலாக்கா ஐசிடி ஹோல்டிங் நிறுவனத்தின் மூலம் மாநில அரசு இவ்வாண்டு முழுவதும் 30 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களைக் கட்டுவதை இலக்கு கொண்டுள்ளது.
இதன் மூலம் மலாக்கா முழுவதும் இணைய அலைவரிசை வலையமைப்பை மேம்படுத்துகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில பகுதிகளில் இணைய தொலைத்தொடர்பு சேவை திருப்திகரமாக இல்லாததை தொடர்ந்து இந்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தை நனவாக்கும் முயற்சியில்,மலேசிய தொலைத்தொடர்பு ஆணையத்தின் (MCMC) ஒத்துழைப்பில் 2025 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத இணைய சேவைத்தரத்தை மேம்படுத்த இலக்காகக் கொண்டுள்ளது.

மலாக்கா முழுவதும் 30 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளையில்
இந்த கோபுரங்களின் கட்டுமானம் மல்டி ஆபரேட்டர் கோர் நெட்வொர்க் (MOCN) தீர்வைப் பயன்படுத்தும் நில ஒப்புதல் மற்றும் கட்டிட அனுமதிகளை உடனடியாக வழங்குவதை உறுதி செய்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களும் நல்ல ஒத்ழுழைப்பு வழங்கும் என்று முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா ரவுப் தெரிவித்தார்.
இந்த தொலைத்தொடர்பு கோபுரத்தின் கட்டுமானப் பணிகளை நவம்பர் மாதத்திற்கு முன்னதாகவே முடிக்க முயற்சிப்போம்.4ஜி தரத்திலிருந்து 5ஜி கூடுதலாக இணைய சேவைத்தரத்தை மேம்படுத்த மாநில அரசு முயற்சிப்பதாக ரவுப் இணக்கம் தெரிவித்தார்.



