Malaysia

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் மையமாக மலாக்கா அறிமுகம் ! கவிஅரசன் அன்பரசன்

மலாக்கா , ஏப்.19-
2028 ஆம் ஆண்டுக்குள் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மையமாக மலாக்கா அறிமுகப்படுத்தவுள்ளது.

மலாக்கா அனைத்துலக விமான நிலையமான பத்து பெரெண்டமில் உள்ள ஓர் இடத்தில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை மேம்படுத்துவதற்காக மலாக்கா மாநில அரசுக்கு வெ 16.54 பில்லியன் மத்திய அரசு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஆண்டு 6.9 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டுமானத் திட்டங்கள் தொடங்கியுள்ளது.இத்திட்டத்திற்கு உதவ மாநில அரசு மூன்று ஆண்டுகளுக்குள் முழு ஆதரவை வழங்கும். உலகின் முன்னணி ஹெலிகாப்டர் உற்பத்தியாளரான இத்தாலியின் ரோமில் உள்ள லியோனார்டோ நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் வழி மலாக்கா மாநிலத்திற்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவதாகக் உறுதியளித்தனர்.

கூடுதலாக,இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு பயிற்சி மையம் மற்றும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை ஆகியவை அடங்கும், மேலும் வெஸ்ட்ஸ்டார் குழுமம் ஒவ்வொரு ஆண்டும் 1,500 ஹெலிகாப்டர் விமானிகளை உருவாக்கும். இந்தக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால், இந்த மேம்பாட்டின் செயல்பாடு வணிக விமானங்களுக்கு இடையூறு விளைவிக்காது என்பதனை மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா ரவுப் தெரிவித்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button