Malaysia

எல்லா காலகட்டத்திலும் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தப்பட வேண்டும் மனிதநேய மாமணி லத்னவள்ளி அம்மையார் தொழிலாளர் தின வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்.30-
தேர்தல் காலத்தில் மட்டும் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தாமல் எல்லா காலகட்டத்திலும் அக்கறை காட்டினால் எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திதிலும் தொழிலாளர்கள் நலம் பெறுவார்கள் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி தொழிலாளர் தின வாழ்த்து செய்தியில் கூறினார்.

தொழிலாளர்கள் நலனுக்காக அனைத்து துறைகளும் பாடுபட வேண்டும். அரசாங்கம் மாறாலாம். ஆனால், தொழிலாளர் நலன் காக்கப்பது எந்த சூழ்நிலையிலும் விடுபட்டு விடக்கூடாது என்று ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்.

மக்கள் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கை எப்போதும் தொடரப்பட வேண்டும். தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தின வாழ்த்து செய்தியில் சமுதாய தொண்டருமான ரத்னவள்ளி அம்மையார் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு குறிப்பாக தொழிலாளர்களுக்கு இனம், மதம் பேதமின்றி அனைத்து துறைகளும் உதவ வேண்டும். அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் பாடுபட வேண்டும் என்று ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக் கொண்டார்.

நாடு தழுவிய நிலையில் இருக்கும் அனைத்து துறைகளும் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்க வேண்டும். இதனை மாநில அரசாங்கம் கவனத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு உற்ற நண்பனாக இருக்க வேண்டும் என்று ரத்னவள்ளி அம்மையார் சொன்னார்.

இந்திய தலைவர்கள் உள்ளூர் ஆலயம், தமிழ்ப்பள்ளிகள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கி பாதுகாக்க வேண்டும். இந்தப்பணியை ம.இ.கா மிகவும் சிறப்பாக செய்து வருகிறது. இதில் குறிப்பாக ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையிலான தலைமைத்துவம் இந்தியர்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருவது பாராட்டத்தக்கது என்று ரத்னவள்ளி அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை கொண்டாடவிருக்கின்றனர். அந்த வகையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் தொழிலாளர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button