Malaysia

குறைந்த விலையில் உயர்ந்த தொழில்நுட்ப, தொழில் திறன் கல்வி புதிய உருமாற்றம், கூடுதல் தொழிற்கல்விகள் மாணவர்கள் டேஃப் கல்லூரியை தாராளமாக நாடலாம் ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் அழைப்பு

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

சிரம்பான், மே 2-
மலேசிய இந்திய மாணவர்களுக்கு குறைந்த விலையில் உயர்தர தொழில்நுட்ப, தொழில் திறன் கல்வியை வழங்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள டேஃப் கல்லூரி
புதிய உருமாற்றத்துடனும் அதிகமான தொழிற்கல்விகளை மாணவர்களுக்கு வழங்கும் என்று
ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.

டேஃப் கல்லூரி கடந்த 1988ஆம் ஆண்டு எம்ஐஇடி எனப்படும் மாஜூ கல்வி வாரியத்தின் கீழ் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி கிட்டத்தட்ட 40,000 திறமைசாலி பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதால் சிறந்த, பலதரப்பட்ட தொழிற்கல்வியை வழங்கி வருவதாக
எம்ஐஇடி தலைவருமான தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

டேஃப் கல்லூரி அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளதால் இக்கல்லூரி முழுமையாக சீரமைக்கப்படவுள்ளது.
இந்த சீரமைப்புப் பணிகளுக்கு முன் புதிய தொழிற் திறன் கல்வித் திட்டங்கள் இக்கல்லூரியில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் .
இந்திய மாணவர்கள் பயனடைவார்கள் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

இந்த தொழிற்கல்வியின் வழி அதிகமான இந்திய மாணவர்களுக்கு மேலும் தரமான தொழிற் திறன் கல்விகளை வழங்கி அவர்களை சாதனையாளர்களாக உருவாக்க முடியும் என்று டேஃப் கல்லூரியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு கூறினார்.

.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button