Malaysia

மலாக்கா பொது மருத்துவமனையின் தகவல் அமைப்பு துரித மேம்பாடு ! 

 

தேசம் செய்திகள் கவிஅரசன் அன்பரசன்

மலாக்கா , மே 8-

மலாக்கா பொது மருத்துவமனையில் கூடுதலாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டுமானத் திட்டத்திற்காக அதன் தகவல் அமைப்புக்கு துரிதமாக மேம்படுத்தப்படும், இதற்கு கூடுதலாக வெ 1 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாநில சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஒற்றுமைத்துறை தலைவர் டத்தோ நங்வே ஹீ செம் தெரிவித்தார்.

இந்த மேம்படுத்தல் பணி, பொருளாதார அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மொத்த வெ 27 மில்லியன் கூடுதல் செலவு விண்ணப்பத்தில் ஒரு பகுதியாகும்.

மலாக்கா மக்களின் நலனுக்காக மருத்துவமனையில் சுகாதார சேவைகள் மிகவும் திறமையாகவும் நவீனமாகவும் செயல்படுவதை உறுதி செய்வதற்கு மருத்துவமனை தகவல் அமைப்பை மேம்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்.பழைய மருத்துவமனை இருந்த இடத்தில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டதைத் தொடர்ந்து பல தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மருத்துவமனை கட்டுமானத் திட்டமும் தாமதங்களைச் சந்தித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button